முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் பயங்கரம்: கொள்ளையர்களை பிடிக்க முயன்ற சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய  கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர், கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது, ராம்புர்கலான் என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சென்னை மதுரவாயல் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

நகைக்கடையில் கொள்ளை

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த முகேஷ்குமார் (37). கடந்த 15 வருடங்களாக சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலையில் ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மதியம் இவர் கடையின் மேல் தளத்தில் துளையிட்டு உள்ளே இறங்கிய இரண்டு வட மாநில நபர்கள் நகைக்கடையில் இருந்த 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். போலீஸ் விசாரணையில், மேல் தளத்தில் உள்ள கடையை சமீபத்தில் ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட அவரையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடினர். சி.சி.டி.வி பதிவில் கொள்ளையர்கள் நகைகளுடன் சாதாரணமாக நடந்து செல்லும் காட்சிப் பதிவு கிடைத்தது.

ராஜஸ்தான் விரைந்தது

இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும், சிலர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்களை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர்.

குண்டு பாய்ந்து பலி

நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருந்ததை அடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கொள்ளையர்கள் அவர்களை நோக்கி சுடவே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

தீவிர சிகிச்சை

அவர்களுடன் சென்றிருந்த போலீஸ்காரர்கள் இன்பரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த துப்பாக்கி சூட்டால் போலீசார் நிலை குலைந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. பிணமாக கிடந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடல் மீட்கப்பட்டது. காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முனிசேகர் உள்பட 5 போலீசாரும் மீட்கப்பட்டு ஜெய்த்ரன் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கமி‌ஷனர் ஆலோசனை

இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன், வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் ஜெயராம் ஆலோசனை நடத்தினார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடலை சென்னைக்கு கொண்டு வரஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து இணை கமி‌ஷனர் முகேஷ் குமார் தலைமையில் சிறப்பு போலீஸ் படை ஒன்று ராஜஸ்தான் விரைந்துள்ளது.

நெல்லையை சேர்ந்தவர்

சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தேவர்குளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாலைபுதூரைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் செல்வராஜ். 1969-ம் ஆண்டு பிறந்த இவர் பி.எஸ்.சி. படித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு இவர் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். கடந்த அக்டோபர் மாதம் தான் இவர் மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றலாகி வந்து பொறுப்பேற்றார். 2 மாதத்திற்குள் நகைக்கடை கொள்ளை விசாரணை அவருக்கு எமனாக மாறி விட்டது. ஆவடி வசந்த் நகரில் உள்ள நேரு தெருவில் வசித்து வந்த அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் ஆவடி சென்று இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கொள்ளையர்களை பிடிக்க சென்றதில் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து