விருத்தாசலத்தில் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் வசதி வி.டி.கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      கடலூர்
viruthachalam mla

விருத்தாசலத்தில  சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதிமேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டது.

கோரிக்கை
விருத்தாசலம் நகராட்சி 14-ஆவது வார்டு உள்பட்ட தாகண்ட் நகர் பாடசாலை வீதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளைக கிணறு அமைத்துத் தரவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. வி.டி.கலைச்செல்வன் ஆழ்துளைக கிணறு அமைப்பதற்காக தனது தொகுதிமேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை ஒதுக்கீடு செயதார் இதற்கான பணிகள் நிறைவுற்ற நிலையில், ஆழ்துளைக் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கே.பாலு தலைமை வசித்தார். வி.டி.கலைச்செல்வன எம்.எல்.ஏ. ஆழ்துளைக் கிணறு செயல்பாட்டினை தொடக்கிவைத்தார்

நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் எல்.ராஜசேகரன், கேப்டன் சி.காமராஐ; மார்கெட் நடராஐன், மு.நகர மன்ற உறுப்பினர் ப.அருளாகரன், தியாக.ரத்தினராஐன் உள்ளிட்டோர பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து