முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த  கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்து கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை 21 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்படும். அதற்குப் பின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படும். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளின் தாக்கம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் கிளம்பி இரு அவைகளிலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்சிக்கூட்டம்
பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் இன்று மாலை 7 மணிக்கு கூட்டியுள்ளார். இதில் பிரதமர் மோடி உட்பட பாராளுமன்ற இரு அவைகளின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தம் செயல்பாடுகளை முடிவு செய்ய ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளன. குலாம்நபி ஆசாத்தின் நாடாளுமன்ற அலுவலகத்தில் கூடும் காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா காந்தி, மக்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, அனந்த்சர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் திட்டம்
குளிர்கால கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயல்கிறது. இதனுடன் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் மீது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து