முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடிமெட்டு மலைச்சாலையில் கனமழையால் பாறை சரிவு : போக்குவரத்து பாதிப்பு

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

போடி, - தேனி மாவட்டம், போடிமெட்டு மலைச்சாலையில் கன மழை பெய்ததால் சில இடங்களில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
போடி பகுதியில்  லேசான சாரல் மழை பெய்து வந்தது. மலை கிராமங்களான போடிமெட்டு, குரங்கணி உள்ளிட்ட மலை கிராமங்களில் கன மழை பெய்தது. போடிமெட்டு மலைச்சாலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள புலியூத்து அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து பகுதியில் சில இடங்களில் பாறை மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டுவர்கள் பாறைகளை லேசாக நகர்த்திவிட்டு வாகனங்களை இயக்கும் நிலையில், பேருந்து மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சரிந்துள்ள பாறைகளை அகற்றுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்கும்படி வாகன ஓட்டிகளிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து