முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாய இணைப்பு உத்தரவுக்கு தடைகோரி மனு: ஆதார் எண் வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.

மனுக்கள் தாக்கல்
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இன்று விசாரணை
இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார். தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. ஆதார் தொடர்பான விளக்கங்கள் மற்றும் இடைக்கால உத்தரவு கோரும் மனுக்களையும், இந்த அமர்வு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து