முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணிக்கொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாமில் ரூ.13.30 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      நீலகிரி
Image Unavailable

அணிக்கொரை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.13.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
                              இயற்கை விவசாயம்
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை கிராமத்தில் மனுநீதிநாள் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது-
இம்மனுநீதி நாள் முகாமில் அரசு சார்ந்த எல்லா துறை அதிகாரிகளும் உங்களை தேடி வந்துள்ளனர். அரசு நமக்காக எத்தனையோ திட்டங்களை தீட்டி அதை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் உன்னத உதகை என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இம்மாவட்டத்தை பசுமையாகவும், சுத்தமாகவும் வைக்க  பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குப்பைகளை தெருக்களிலும், வடிகால்களிலும் போடாமல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை குழியில் மக்கும் குப்பைகளை கொட்டி மக்காத குப்பைகளை ஊராட்சி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள தூய்மை காவலர்களிடம் வழங்கவேண்டும். மேலும் நமது மாவட்டம் இயற்கை விவசாயம் நிறைந்த முழுமையான மாவட்டமாக இருக்க வேண்டும்.
                    கிராம மக்கள் ஒத்துழைப்பு
தூனேரி கிராமத்தில் 1 ஜிஎப் திட்டத்தின் கீழ் 2 பணிகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. 14_வது நிதி திட்டத்தின் கீழ் 6 பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.10 லட்சம் அம்மா பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 14_வது நிதி திட்டத்தின் கீழ் தெவிட்டு முக்கு, சாமிநாதபுரம், அம்பேத்கார் நகர், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் கால்வாய் மற்றும் நடைபாதை என 8 பணிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் எடுக்கக்கூடிய அனைத்து வித நடவடிக்கைகளுக்கும் தூனேரி கிராம மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இம்முகாமில் முதியோர், முதிர்கன்னி, விதவை, உழவர் பாதுகாப்பு திட்ட உதவி தொகையாக ஒரு பயனாளிக்கு ரூ.1,000 வீதம் 16 பயனாளிகளுக்கு ரூ.16,000ம், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, வாகன கடன் என மொத்தம் ரூ.13 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 105 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து