முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

195 கோயில்களில் நாளை முதல் ஆண்டாள் திருப்பாவை பாட திவ்ய பிரபந்த ஆழ்வார் அமைப்பு திட்டம்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, திருமலை, திருப்பதி தேவஸ்தான கோயில்கள் உட்பட நாட்டில் உள்ள 195 கோயில்களில் நாளை 16ம் தேதி முதல், ஆண்டாள் திருப்பாவை சேவையைப் பாட திவ்ய பிரபந்த ஆழ்வார் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஒவ்வொரு ஆண்டும் சுப்ரபாத சேவைக்கு பதில், திருமலையில் ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுகின்றன. இந்த ஆண்டு நாளை  16ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14ம் தேதி வரை பாடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானத்தின் திவ்ய பிரபந்த ஆழ்வார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

திருமலை ஏழுமலையான் கோயில் உட்பட திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் மற்றும் திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா கலாமந்திர், வரதராஜ சுவாமி திருக்கோயில், கீதா மந்திர், மலையாள சத்குரு சேவா சமாஜம், பக்த ஆஞ்சநேய சுவாமி கோயில், சந்திரகிரியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அறக்கட்டளை அரங்கு உட்பட பல இடங்களில் திருப்பாவை காலை 7 மணி முதல் 8 மணி வரை பாடப்படுகிறது.

இதே போன்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவக் கோயில்களிலும், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில், மகாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீ ரொன்ச்சா கோயில், டில்லி, ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 195 வைஷ்ணவ கோயில்களில் நாளை 16ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை ஆண்டாள் திருப்பாவை பாடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து