சேலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      சேலம்

சேலத்தில் வாகன தணிக்கையின் போது சந்தேகப்படும்படியாக சரக்கு வாகனத்தில் வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூவரை காவல்துறையினர் பிடித்து  அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும்  ஒரு லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து  ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்..

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு கொள்ளை, கொலை சம்பவங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தொடர்பு உள்ளதாக காவல்துறையினரின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவையில் சமீபத்தில் நடைபெற்ற எடிஎம் மைய கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தினர் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது . இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு மாவட்டத்தில் சந்தேகப்ப்படும்படியாக வந்த வட மாநிலத்தை சேர்ந்த மூவரை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிடையே சேலம் மாநகரம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சோதனை சாவடியில், நேற்று அதிகாலை மாநகர காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வேகமாக வந்த வட மாநிலத்தை சேர்ந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த மூவரும் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததை தொடர்ந்து, சந்தேகமடைந்த காவல்துறையினர் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும்  வந்த வாகனத்தை சோதனை செய்ததில், வாகனத்தில் ஒரு பகுதியில் உள்ள ரகசிய அறையில், பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வாகனம் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், மூவரிடமும் இருந்த சுமார் 1 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சரக்கு வாகன ஓட்டுனரான ஹரியானாவை சேர்ந்த அமீன், மற்றும் அவரது உதவியாளர் சபீர் என்கிற சுரேஷ் என்பதும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோசம்கான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் எடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா அல்லது இவர்கள் வேறு எங்கேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ள்னாரா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது..

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து