கரூர் நகராட்சிகுட்பட்;ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் : கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      கரூர்
karur 2017 12 14

 

கரூர் நகராட்சிகுட்பட்ட வ..சி நகர், குறிஞ்சி நகர்,சிவசக்தி நகர், பழைய பைபாஸ் ரோடு, ஆகிய இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் சுற்றுபுற சுகாதார பணிகளை நேற்று(14.12.2017)மாவட்ட கலெக்டர் கு.கேவிந்தராஜ், பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

டெங்கு தடுப்பு பணி

கரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் சுற்றுப்புற சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று வ..சி நகர், குறிஞ்சி நகர், சிவசக்தி நகர் பகுதிகளில் தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அத்துடன் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமைப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டு கழிவு நிPர் கால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி கழிவு நிPர் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டது.அப்பகுதியில் தனியார் ஆரிசி மண்டி கடையின் முகப்பு பகுதியில் குப்பைகளை அகற்ற கடை உரிமையாளர்ருக்கு நோட்டிஸ் வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் அசோக்குமார், வட்டாட்சியர் அருள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து