கொத்தடிமை ஒழிப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      நாமக்கல்
namakkal colector

நாமக்கல் மாவட்ட அளவிலான கொத்தடிமை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த மாநில செயல்திட்ட அமலாக்கம் குறித்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று (13.12.2017) நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டம்

இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தலைமையில் நடைபெற்றது. கொத்தடிமை தொடர்பான மாநில திட்ட செயலாக்கம் பற்றி துறை அலுவலர்களுக்கு விளக்கப்பட்டது. சிறு மற்றும் பெரு தொழில் நிறுவன’;களில் கொத்தடிமை தொழிலாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளவும், கொத்தடிமை தொழிலாளர்களை வைத்திருக்கும் நிறுவன’;களில் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர்  உத்தரவிட்டார். மேலும் நாமக்கல் மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர் அற்ற மாவட்டமாக மாற்ற அனைத்து துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட அறிவுரைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி  திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் வெ.பாஸ்கரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் திட்ட இயக்குநர் அந்தோனி ஜெனிட்,  தொழிலாளர் ஆய்வாளர் (பொ) மஞ்சள்நாதன், இணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (சேலம், மற்றும் மேட்டூh);, மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து