சேலம் மாவட்டத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      சேலம்
slm collector

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்   உணவு பாதுகாப்பு துறையின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின் கலெக்டர்  தெரிவித்ததாவது.

வழிகாட்டுதல் குழு கூட்டம்

 அரசு சார்ந்த உணவு மையங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறுவது குறித்தான ஆய்வுக்கூட்டம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் கலந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது மற்றும் விற்பனை செய்வதை மாவட்ட அளவில் தடுப்பது குறித்த  ஆய்வு கூட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையின் குறித்த வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது.     இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கும்,  துறை சார்பில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அனைத்து துறைகளும் இணைந்து ஆய்வு செய்வது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் 2017 ஏப்ரல் மாதம்  முதல் நவம்பர் மாதம் வரை சேலம் மாவட்டத்தில் 2,547 கிலோ ரூ.37 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் உள்ளிட்ட  தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் உணவுபாதுகாப்பு துறையின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளவும், குறிப்பாக பள்ளிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்கப்படும் திண்பண்டங்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில்  உள்ளனவா என்பது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே  தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில்  மாவட்ட உணவு பாதுகாப்பு  நியமன அலுவலர் டாக்டர் ஆர்.மாரியப்பன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள்  மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து