முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருவி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்கம் முன்பு பா.ஜ.க.வினர் திடீர் போராட்டம்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      புதுச்சேரி
Image Unavailable

புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கத்தில் அருவி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

புகார் மனு

இந்நிலையில் நேற்று காலை பாரதிய ஜனதா கட்சியினர் உருளையன்பேட்டை தொகுதி தலைவர் பி.எஸ்.எஸ்.கணேஷ் தலைமையில் திரையரங்கத்தின் முன் ஒன்று கூடி கோஷம் இட்டதுடன் பெண்களை இழிவுபடுத்தி ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரை கிழித்தனர். அதில் ஒரு நடிகை அம்மன் வேடத்தில் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போலவும், மற்றொரு நடிகை மது பானத்தை கையில் வைத்துக்கொண்டு புகை பிடிப்பது போலவும் உள்ளது. இது பெண்களை இழிவு படுத்துவதாக கூறி  போஸ்டரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்பு அதில் ஒரு பிரிவினர் திடீரென போஸ்டரை கிழிக்கவும் செய்தனர். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆய்வாளர் நாராயணசாமியிடம்  புகார் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அகிலன், மூர்த்தி, செல்வம், சசிக்குமார் மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இதனால் நேற்று காலை அண்ணா சாலையில் சிறிது நேரம் திடீர் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து