முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருத்தாசலத்தில் 301 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் ஆளுநர் பன் வாரிலால் புரோகித் வழங்கினார்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      கடலூர்
Image Unavailable

விருத்தாசலத்தில் சர்வதேச அரிமா சங்கம் மற்றும் விருத்தாசலம் அரிமா சங்கங்களின் நூற்றாண்டு விழாவில் ரூ.25லட்சம் மதிப்பிலான  301 மாற்று திறனாளிகளுக்கு செயற்க்கை கால் பொறுத்தும் முகாம் நடைபெற்றது

செயற்கை கால் பொறுத்தும் முகாம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம்  அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற மாற்று தினனாளிகைளுக்கான செயற்க்கை கால் பொறுத்தும் முகாமிற்க்கு தமிழக ஆளுநர் பன் வாரிலால் புரோகித்  சென்னையிலிருந்து ரயிலில் பொது மக்கள் பயணம் செய்யும் பெட்டியிலேயே பயணித்து விருத்தாசலம்  வந்தார் அவரை அரிமா சங்க பிரதி நிதிகள் மற்றும் கடலூர் கலெக்டர் பிரசாந்த் வடனேரே ஆகியோர் வரவேற்ப்பு அளித்தனர் நல திட்ட முகாமில் சிறப்புரையாற்றிய ஆளுநர் மதங்கள் கடவுள்கள் எல்லாமே மனித நேயத்தையே வலியுறுத்துகின்றன மேலும் மனிதர்கள் மனித நேயத்தை கடைபிடிக்க வேண்டும் என பேசினார்  301 மாற்று திறனாளிகளுக்கு செயற்க்கை கால்களை வழங்கினார்.

உடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அரிமா சங்கத்தின் நிவாகிகள் பொன்னுராம் பரமகுரு,   ராமசாமி, தனுஷ்கோடி, அகர்சந்த், சந்திரசேகரன் ஆகியோரும் ஏராளமான அரிமா சங்கபிரதிநிதிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர் அதன் பின் ஆளுநர்   விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்க்கு வருகை புரிந்தார் அவரை ஆலய நிர்வாகிகள் வரவேற்றனர் அதன் பின்  ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த ஆளுநர் கடலூர் சென்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து