முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயங்கொண்டம் நகராட்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      அரியலூர்
Image Unavailable

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

இவ்வாய்வின் போது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருடைய வருகைப் பதிவேடுகள் மற்றும் அனைத்து பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்கள். மகப்பேறு சிறப்பு சிகிச்சை பிரிவினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுயிருக்கும் கர்ப்பிணிப்பெண்களிடம் முறையான தடுப்பூசிகள் உங்கள் பகுதியில் உள்ள கிராம செவிலியர்களால் அளிக்கப்பட்டதா என கேட்டறிந்து அதற்கான மருத்துவ அட்டையினை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளையும் பார்வையிட்டு மருத்துவமனை தூய்மையாக பராமரித்திடவும் பொதுமக்களும் மருத்துவமனையை சுகாதாரமாக பயன்படுத்திட அறிவுறுத்தினார்கள். டெங்கு காய்ச்சல் தொடர்பான சிறப்பு சிகிச்சை வார்டை பார்வையிட்டு காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளிடம் உடனுக்குடன் சிகிச்சை மேற்கொண்டு டெங்கு இல்லா மாவட்டமாக உருவாக்கிட மருத்துவத்துறை மற்றும் இதர துறையினரும் சிறப்புடன் பணியினை மேற்கொள்ளுமாறு ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின்போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து