நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்
Nagai 2017 12 15

 

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்படும்; முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நேற்று(16.12.2017) துவக்கி வைத்தார்.

விளையாட்டு போட்டி

விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,தமிழக முதலமைச்சர் ஆணையின்படி, 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2017-18ம் ஆண்டுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, இறகுபந்து, டென்னிஸ், மேசைப்பந்து, கபாடி மற்றும் வளைகோல்ப்பந்து ஆகிய பத்து விளையாட்டுக்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகளை நடத்திட தமிழக அரசால் தொடர் மான்யமாக ரூ.809.00 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதலமைச்சர் கோபைக்கான விளையாட்டுப் போட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு மாவட்டத்தில் முதல் இடம் பெற 204 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.1000-, இரண்டாம் இடம் பெ204 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.750- மற்றும் மூன்றாம் இடம் பெற்ற விளையாட்டு 204 வீரர்களுக்கு தலா ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதால் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளைப் பெற்று தமிழகத்தை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ ஏதுவாக உள்ளது.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.. மேலும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று நமது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்." என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்;ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.சிவா., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து