கும்மிடிபூண்டி அரிமா சங்கம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு ரூ10 லட்சம் செலவில் வீடு வழங்கும் விழா

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      திருவள்ளூர்
Gumudipoondi 2017 12 16

கும்மிடிபூண்டியில் இயங்கி வரும் சர்வதேச அரிமா சங்க கிளை சார்பில் ஏடூரில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டி தர முடிவு செய்யப்பட்டது.அரிமா சங்க நிர்வாகி கிளெமெண்டின் சொந்த செலவில் ஐந்து வீடுகள், கும்மிடிபூண்டி அரிமா சங்கம் சார்பில் நான்கு வீடுகள் என சுமார் பத்து லட்சம் ரூ செலவில் 9 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

புதிதாக கட்டிடம்

இதையடுத்து புதிய வீடுகளின் திறப்பு விழா மாவட்ட ஆளுநர் சுரேஷ்குமார் தலைமையில் ஏடூரில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் சர்வதேச அரிமா சங்கம் நூறாண்டுகளை தொட்டநிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிமா சங்கங்களும் நூறு என்ற இலக்கை தாண்டி இருநூறு திட்டங்களை நெருங்கி சாதனை படைத்து வருவதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி பங்கேற்று புதிதாக கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்து வீட்டிற்கு தேவையான அடிப்படை பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.விழாவில் அவர் பேசுகையில் இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உடனடியாக மின்சாரம், பட்டா வழங்கப்படும் என்று குறிப்பிட்டவர் இந்த பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இதில் கும்மிடிபூண்டி வட்டாட்சியர் ராஜகோபால், முதல் துணைநிலை ஆளுநர் சுரேஷ், இரண்டாம் துணை நிலை ஆளுநர் சிவகுமார், சுப்ரமணியம், கிளெமெண்ட், ராஜன், ஸ்ரீனிவாசன், அன்பழகன், ரவிசந்தர், சுதாகர், பாஸ்கர்ராவ் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்மிடிபூண்டி அரிமா சங்க தலைவர் தசரதன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் கிருஷ்ணைய்யா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து