ராணிப்பேட்டை நகர காங்கிரஸ்சார் ராகுல்காந்தி பதவியேற்புக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      வேலூர்
wj a

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்புக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவியேற்றதற்கு ராணிப்பேட்டை முத்துக்கடையில் இனிப்புகள் வழங்கினர்.

கொண்டாட்டம்

நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வழக்கறிஞர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எஸ்.எம்.முருகேஷ், ராணிவெங்கடேசன், புலவர் ரங்கநாதன், மோகனசுப்பிரமணி, முருகன், உத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசீகரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. தலைவர் நாகேஷ் கலந்துகொண்டு முத்துக்கடையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கமலகண்ணன், ஜெய்வேலு, சுகுமார், மாசிலாமணி, குப்பன், ஞானசேகரன், உள்பட நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து