பாலக்கோட்டில் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு வழிப்புணர்வு முகாம்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      தர்மபுரி
tmp a

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீமுகாம்பிகை கல்லூரியில் பாலக்கோடு தாலுக்கா பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரியில் உள்ள பஸ்,வேன் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பொதுமக்கள்ஆகியோருக்கு பாலக்கோடு போக்குவரத்து ஆய்வாளர் அன்பு செழியன் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புனர்வு முகாம் நடைப்பெற்றது,

விழிப்புனர்வு முகாம்

இம்முகாமில் போக்குவரத்து ஆய்வாளர் அன்பு செழியன் சாலைபாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார் வண்டியை இயக்கும் போது சீட் பெல்ட், மற்றும் இருசக்கர வாகணத்தில் செல்லும்போது தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டியதின் அவசியத்தை பற்றி எடுத்து கூறினார், வாகணங்களை முறையாக எவ்வாறு பராமரிக்க வேண்டும், வாகணங்களில் செல்லும்போது கவணிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன மேலும் சாலைவிதிகளை பின்பற்றாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்களைப் பற்றி விரிவாக கூறினார், சாலைவிதிகளை பின்பற்றாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்களைப் பற்றி குறும்படம் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது,இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு தாசில்தார் அருன்பிரசாத் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள்,ஊழியர்கள் மற்றும் அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து