முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வல்லரசு நாடுகளிலும் இல்லாத திட்டங்கள் தந்து தமிழகத்தில் நல்லரசு நடத்தியவர் ஜெயலலிதா - ஆர்.கே.நகரில் முதல்வர் எடப்பாடி புகழாரம்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வல்லரசு நாடுகளிலும் இல்லாத திட்டங்களை தந்து தமிழ்நாட்டில் நல்லரசு நடத்தியவர் ஜெயலலிதா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். தண்டையார்ப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவில் இருந்து முதல்வரும் துணை முதல்வரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர், பல்வேறு தெருக்களின் வழியாக திறந்த ஜீப்பில் சென்ற அவர்களுக்கு மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் மேளதாளங்கள் முழங்க அ.தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பளித்தனர்,

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே பேசியதாவது:

ஆர்.கே.நகரில் சாலை, கழிவு நீர், மழை நீர் சேகரிப்பு என்று பல்வேறு திட்டங்களை தந்தவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் மக்களுக்காக மகளிர் கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை தந்து மக்களிடையே கல்வி கற்பிப்பதில் ஆர்வமுடையவர் மறைந்த ஜெயலலிதா,. இதுவரை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெருத்தெருவாக வரவிருக்கிறார், இந்திய துணைக்கண்டத்தில் மக்கள் நலத்திட்டங்களை வாரி வழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா . பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் இலவச நோட்டுப்புத்தகங்கள் என்று மாணவர்களுக்கு சலுகை மழை பொழிந்தவர். மேலும் வல்லரசு நாடுகளிலும் இல்லாத திட்டங்களை தந்து நல்லரசு நடத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது  பிறந்த நாளான பிப்ரவரி 24 ம் தேதி, படித்த இளம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை இதே ஆர்.கே.நகரில் தொடங்க இருக்கிறோம், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் இந்த தொகுதிக்கு அறிமுகமானவர், மக்கள் பிரச்சினைகளை அறிந்தவர், உணர்ந்தவர். அவருக்கு நீங்கள் வரலாறு காணாத வெற்றியை வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து