பார்த்தீனிய செடியை அழிப்பது குறித்தும் அந்த தாவரத்தை இயற்கை உரமாக்குவது குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் செயல் விளக்கம்.

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      ஈரோடு
Gobi 1 0

கோபி முருகன்புதூரில் செயல்பட்டுவரும் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் பார்த்தீனிய தாவரத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பார்த்தீனிய செடியை அழிப்பது குறித்தும் அந்த தாவரத்தை இயற்கை உரமாக்குவது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்..
                                       
 தமிழகத்தில் வேளாண்மை பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் இறுதியாண்டில் மூன்று மாதங்கள் கிராமங்களில் தங்கியிருந்து விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் கோவையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் 11 பேர் கொண்டகுழுவினர் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ் தங்கியுள்ளனர். இம்மாணவிகள் ஒவ்வொரு கிராமங்களாக சென்று விவசாயிகளுடன் இணைத்து வேளாண்மைகள் குறித்தும் பயிர்சாகுபடிகள் குறித்தும் கற்றறிந்து நெல்நடவுப்பணி தென்னை மரங்களுக்கு டானிக்செலுத்துவது விதை நேர்த்தி பாரம்பரிய சாகுபடி முறைகள் உட்பட பல்வேறு விவசாய வேளாண்மை பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் முருகன்புதூரில் செயல்பட்டுவரும் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் பார்த்தீனிய தாவரத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பார்த்தீனிய செடியை அழிப்பது குறித்தும் அந்த தாவரத்தை இயற்கை உரமாக்குவது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.  அதில் பார்த்தீனியம் ஒரு விஷச்செடி என்றும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதகமான செடி பிரச்சனைக்குறிய இக்களையானது ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய செடியாக பல இடங்களிலும் பரவியுள்ளது. இவை ஆஸ்துமா தோல்நோய் மற்றும் சுவாசம் சம்மந்தமான நோய்கள் பார்த்தீனியத்தால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளாகும். கால்நடைகள் பார்த்தீனியச் செடிகளை உண்ணுவதில்லை என்றாலும் கால்நடைகள் பார்த்தீனியச்செடிகளின் வழியாக நடக்கும்போது அல்லது நுகரும்போது அதன் நச்சுத்தன்மை பரவுகிறது. அதன்பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. கால்நடைகளுக்கு வாய்ப்பகுதிகள் மற்றும் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுத்துகிறது. சிறுநீரகம் மற்றும் ஈரல் பகுதிகளில் ஏற்படும் நச்சுத்தன்மையால் கால்நடைகளின் மறு உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது என்பது உட்பட பல்வேறு விதங்களில் எடுத்துரைத்து பார்த்தீனியம் விஷ செடியை அழிப்பதற்கு வேறு எந்த மருத்தும் தேவையில்லை என்றும் வீட்டில் உயோகப்படுத்தும் உப்பை தண்ணீரில் கரைத்து பார்தீனியம் தாவரத்தின் மீது தெளித்தால் போதுமானது என்றும் அவ்வாறாக தெளிக்கும் போது பார்தீனிய விஷசெடி ஒருவாரகாலத்தில் வாடி வறண்டுபோய்விடும் என்றும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் பார்தீனிய தாவரத்தை பயர்களுக்கு இயற்கை உரமாக்குவது குறித்தும் அரசு பள்ளி மாணவிகளுக்கு செயல்விளக்கம் செய்துகாண்பித்தனர். இந்தசெயல்விளக்கத்தின்போது கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் 11 பேர்கள் வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி வேளாண்மை அலுவலர் அரவிந்த் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்…

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து