முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்க பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, ஜம்புலிபுத்தூரில் உள்ள கதலிநரசிங்க பெருமாள் கோவில் சுமார் 900 ஆண்டுகளுக்கும் பழமையான கோவில்.இங்கு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆண்டிபட்டி, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து சாமிதரிதனம் செய்தனர். அனுமனுக்கு பால்,தேன்,தயிர் மற்றும் அனைத்து அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் தீபாராதனை செய்யப்பட்டது. கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் ஜெய் ராம்,ஜெய் ராம் என்று கோசங்கள் முலங்க  சாமி தரிசனம் செய்தனர்.பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து