இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் பா.பொன்னையர் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      காஞ்சிபுரம்
employment camp

காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

வேலைவாய்ப்பு முகாம்

இப்பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் ஹரிதா பெக்ரா, அப்பல்லோ பார்மஸி, அடிசன் கம்பெனி லிமிடெட், ஹட்சன் அக்ரோ புராடெக்ட், போஸ்ச் கம்பெனி, மேக்னம் கேசுவல்ஸ், டாங் சங் ஆட்டோமேடிங் லிமிடெட், ஜி4எஸ் செக்யூரிட்டி மற்றும் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை வழங்க இருக்கும் நிறுவனங்கள் டி.வி.எஸ் டிராயினிங் சர்வீஸ், மெக்பெடாவிக் லிமிடெட், ஏடிடீசி பயிற்சி நிறுவனம், பி.எஸ்.என்.எல் ஆர்ஜிஎம்ட டிடிவி, ஃபுட்வியர் டிசைன் டெவலப்மென் சென்டர்  உள்ளிட்ட  13க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.இப்பயிற்சி முகாமை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர்  பேசியதாவது.

இப்பயிற்சி முகாமில் 13க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன, படித்த இளைஞர்கள் முன்பு போல் இல்லாமல் தற்போது சரியான, தனது படிப்பிற்கேற்ற, தனியார் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க முடிகிறது மேலும் தங்கள் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப வேலை பார்க்க நிறுவனத்தை தேர்ந்தெடுக்க முடிகிறது. வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் தங்கள் தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சியை கொடுத்து வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பை பெற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்தி பொருளாத்தில் முன்னேற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் இதுவரை பங்கேற்றுள்ளனர். பங்கேற்றுள்ள அளைவருக்கும் இம்முகாமிற்கு வந்துள்ள தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க கேட்டுக்கிறேன்.தற்போது மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்குகளில் வீடுகட்டி வசித்து வந்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு நாவலூர் பரப்பணஞ்சேரி ஊராட்சியில் குடிசை  வாரிய குடியிருப்பில் வழங்கப்பட்டு வருகிறது.அங்கு இடம் பெயர்ந்து வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் அங்குள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியாக சிறப்பு வேலைவாய்ப்ப முகாம் நடத்தப்பட்டு  அங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் துணை இயக்குநர் ஆர்.அருணகிரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து