தண்ணீர்குளம் குறிஞ்சி பள்ளியில் 8ம் ஆண்டு விளையாட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      திருவள்ளூர்
sports day

திருவள்ளுர் மாவட்டம் தண்ணீர்குளம் ஊராட்சியில் உள்ள குறிஞ்சி சி.பி.எஸ்.சி பள்ளியில் 8-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நடைபெற்றது.

பரிசுகள்

விழாவிற்கு பள்ளி மேலாளர் கே.சுயம்புகனி தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் கே.சுனில்குமார்,கே.எழில்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 8-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி விழாவில் யோகா,கராத்தே,சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.சிறப்பு விருந்தினர்களாக தே.மு.தி.க மாநில தொண்டரணி செயலாளர் கராத்தே எஸ்.கணேசன்,திருவள்ளுர் ஒன்றிய கழக செயலாளர் பா.ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கினார்கள்.முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.விழாவில் பள்ளி முதல்வர்,தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து