சேலம் மாவட்டத்தை திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      சேலம்
2

 

சேலம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுதலை ஊக்குவிக்கும் ஊக்குநர்களுக்கான கலந்துரையாடல் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடைபெற்றது. இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது.

கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டதூய்மை பாரத இயக்கத்தின் (கிராமம்) கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற பகுதிகளாக மாற்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வித் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத்துறை, வருவாய்த் துறை, விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கூட்டத்தில் விடியற்காலையில் திறந்தவெளியில் மலம் கழிக்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள 385 ஊராட்சி அளவிலான ஊக்குநர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் அப்பணியில் ஏற்படும் சிரமங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, ஊக்குநர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.

மேலும், கூட்டத்தின் இறுதியில் சிறப்பாக பணிபுரியும் ஊக்குநர்களுக்கு குடியரசு தினத்தன்று பாராட்டுச்சான்று வழங்கப்பட்டு ஊக்குநர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். கழிவறை கட்ட ஊக்குவிப்பு மேற்கொண்டமைக்காக அவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் அவ்வப்போது தாமதமின்றி வழங்கப்படும் என கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, இ.ஆப., தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், அருள்ஜோதி அரசன், மகளிர் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், செயற்பொறியாளர்.ஆறுமுகம், மத்திய அரசின் பிரதிநிதி கவின்கோகுல் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து