தூய்மை இந்தியா திட்டம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      சேலம்

 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் திடகழிவுகளைதரம் பிரித்து, நீலம் மற்றும் பச்சை கூடைகளில் வழங்கிடவும், பொது இடங்களில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறைகள் பயன்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரணி

இந்நிலையில் பொதுமக்களிடையே தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழப்புணர்வு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் பொருட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி 17.12.2017 அன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் ரெ. சதீஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி மாநகராட்சி மைய அலுவலகத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் சென்றடையும், இப்பேரணியில் 70-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் அ.அசோகன், ஆர். ரவி, மாநகர் நல அலுவலர் வி. பிரபாகரன், உதவி ஆணையாளர்கள் கே. கணேசன், கே.பி. கோவிந்தன், ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ், பி. ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து