நாகை மாவட்டத்தில் ஓக்கி புயலால் கடலில் சிக்கி உயிரிர்ந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான காசோலை: கலெக்டர் சீ.சுரேஷ்குமார் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்
4

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் 27.11.2017 அன்று கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று, லட்சத்தீவிற்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 30.11.2017 அன்று வீசிய ஓக்கி புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பயன்படுத்திய படகுநிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கடலில் தத்தளித்த 4 பேரும் நீந்திக் கரைசேரந்த போது, அதில் 3 பேர் உயிர் பிழைத்தனர். கீழ்வேளுர் வட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சபிணன் தபெ சந்திரன் என்பவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

 

 

நிதி உதவி

 

அவருடைய குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மற்றும் தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையினை விபத்தில் உயிரிழந்த சபிணன் என்பவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்.

இந்நிகழ்வின்; போது நாகப்பட்டினம் மீன்வளத்துறை இணை இயக்குநர் ரீனா செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், கீழ்வேளுர் வட்டாட்சியர் மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து