மேட்டூர் உபரிநீர் கால்வாயில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      சேலம்

மேட்டூர் அணையில் உபரிநீர் வெளியேற்றப்படும் கால்வாயில் மூழ்கி 4 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் 16கண் மதகு பகுதியில் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் உள்ளது.இந்த கால்வாயில் நேற்று முன் தினம் மேட்டூரையடுத்த சேலம் கேம்ப் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாலாஜி மகன் மணிகண்டன்( 17) மணி மகன் மோகன்ராஜ்(7) மற்றும் தனபால் என்பவரின் இரு மகன்கள் மகன் தமிழழகன்( 9 )ராஜா( 12) ஆகிய நால்வரும் நேற்று அணையின் இடது கரை அருகே உள்ள உபரி நீர் கால்வாயில் உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளனர் .கால்வாயில் நீர் தேங்கி இருந்ததால் அதில் சேறுஅதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

4 சிறுவர்கள் பலி

குளிக்க சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்னர் . இந்த நிலையில் 4 பேரை காணாமல் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அந்த கால்வாயில் சிறுவனின் உடல் மிதந்தது இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு வீரர்கள் சம்ப வ இடத்திற்கு வந்து கால்வாயில் இறங்கி தேடினர். அப்போது மேலும் 3 சிறுவர்களின் உடலும் கிடைத்தது. 4 பேரின் உடலும் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவர்களின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கறி அழுதனர். இது குறித்து மேட்டூர் போலீசார் வழக்கு வதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 4 சிறுவர்கள் தண்ணீரி்ல் மூழ்கி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து