முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது.

வங்கிக்கடன்

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 15 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 237 என மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்; சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெற ஆணைகளையும், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்பநலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் 24 மணி நேர மருத்துவ உதவி 104-தொலைபேசி சேவைக்கான விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடமும் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், நாகப்பட்டினம் மாவட்ட 108,104 சேவைகளின் செயல் அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து