முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 164 பயனாளிகளுக்கு சான்றிதழ் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில்  மக்கள் சேவையில் மாநகராட்சி திட்டத்தின் கீழ், சிறப்பு சேவை முகாம் நடைபெற்றது.

சிறப்பு சேவை முகாம்

இம்முகாமில், கலெக்டர் சந்தீப் நந்தூரி,  கலந்து கொண்டு, மாநகராட்சி அலுவலர்களால் ஏற்கனவே பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு, 164 பயனாளிகளுக்கு உத்தரவினையும், மேலும், மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 7 துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன் ரூ.63.63 இலட்சம் மதிப்பிலான காசோலைகளையும் வழங்கினார்.முகாமில், கலெக்டர்  பேசியதாவது-

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் மக்கள் சேவையில் மாநகராட்சி திட்டத்தின் கீழ், சிறப்பு சேவை முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு செய்யப்படக் கூடிய பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக உத்தரவினையும், பல்வேறு துறைகள் இணைந்து வழங்க வேண்டிய சான்றிதழ்களுக்கு உடன் நடவடிக்கையும் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாளை மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ள இச்சிறப்பு சேவை முகாம் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் விண்ணப்பதாரர்களுக்கு காலதாமதமின்றி அனுமதிகளை விரைந்து வழங்க முடியும். சிறப்பான இத்திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பேசினார்.அதனைத் தொடர்ந்து கலெக்டர்  சொத்து வரி விதிப்பு 11 நபர்களுக்கும், காலிமனை வரி விதிப்பு ஒரு நபருக்கும், சொத்து பெயர் மாற்றம் 55 நபர்களுக்கும், கட்டட அனுமதி 10 நபர்களுக்கும், புதிய வீட்டு குடிநீர் இணைப்பு 10 நபர்களுக்கும், புதிய பாதாள சாக்கடை இணைப்பு 2 நபர்களுக்கும், பிறப்பு சான்றிதழ் 65 நபர்களுக்கும், இறப்பு சான்றிதழ் 10 நபர்களுக்கும் என மொத்தம் 164 நபர்களுக்கு சான்றிதழ் / உத்தரவினையும், 7 துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதிய பயனாக ரூபாய் 63 இலட்சத்து 63 ஆயிரத்து 37 மதிப்பிலான காசோலைகளையும் வழங்கினார்.

இம்முகாமில், மாநகராட்சி மாநகர நகர்நல அலுவலர் மரு.பொற்செல்வன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், துணை இயக்குநர்/மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.கண்ணதாசன், உதவி ஆணையர் (கணக்கு) கீதா, உதவி செயற்பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) நாராயணன், பாளை மண்டல கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து