தெலுங்கானாவில் நடக்கும் தேசிய அளவிலான டேக்வண்டோ போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகள் : கலெக்டர் வே.சாந்தாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      பெரம்பலூர்

இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சார்பாக, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நலகோண்டா எனும் இடத்தில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் டிசம்பர் நான்காவது வாரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் வயது மற்றும் எடைப் பிரிவு வாரியாக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியை சேர்ந்த ஒருமாணவி உட்பட தமிழகத்திலிருந்து 11 மாணவிகள் பங்குபெற உள்ளனர்.

இவர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட உடற்கல்வி அலுவலர் விஜயன் அவர்களின் வழிகாட்டுதல் பேரில் பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ பயிற்றுநர் தர்மராஜன் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்து நேற்று (19.12.17) ஆந்திரப்பிரதேச மாநில நலகோண்டாவிற்கு புறப்படுவதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, அவர்களை நேற்று முன்தினம் (18.12.17) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கலெக்டர் வாழ்த்து

அதனைத்தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் நலகோண்டாவில் நடைபெற உள்ள் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் வெற்றிப்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்குமாறு வீராங்கனைகளிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். மாநில அளவிலான பாரதியார் தினகுடியரசுதின குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் நேற்று முன்தினம் (18.12.17) மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, அவர்களை மாவட்ட ஆட்சியரகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் இது போன்று பல்வேறு குத்துசண்டை போட்டிகளில் வெற்றிப்பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மாணவிகளிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி, சுகாதார துணை இயக்குநர் மரு.சம்பத், மாவட்ட உடற்கல்வி அலுவலர் விஜயன், பள்ளித் தலைமையாசிரியர்கள் கமலக்கண்ணன், பி.சேகர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் .ரவி, சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து