முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் பேர்லேண்ட் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது.

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

 கம்பம்,-;தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி பேர்லேண்ட் பவுண்டேஷன் பள்ளிக்கு இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இண்டர் நேஷனல் ஸ்கூல் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது.
  கம்பம் அருகே க.புதுப்பட்டி பேர் லேண்ட் பவுண்டேஷன் பள்ளி தேனி மாவட்டத்தில் ஆங்கில வழிக் கல்விக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. கடந்த ஓரண்டாக பிரிட்டிஷ் கவுன்சிலின் நிபந்தனைகளின் படி செயல்பட்டு பிரிட்டிஷ் கவுன்சிலிற்கான சிறந்த பள்ளி விருதை கம்பம்-புதுப்பட்டி பேர்லேண்ட் பள்ளி பெற்றுள்ளது.இந்த பள்ளி கடந்த 2007&ம் ஆண்டு துவங்கப்பட்டது.பேர்லேண்ட் பவுண்டேஷன் பள்ளி யில் எல்.கே.ஜி.முதல் 9&ம் வகுப்பு வரை தற்போது 700 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.45 ஆசிரிய ஆசிரியைகள் உள்ளனர்.ஆங்கில வழிக் கல்வியை சி.பி.எஸ்.ஜ.பாடத்திட்டத்தின் படி பாடம் நடத்தப் பட்டு வருகிறது.இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் செய்து கொண்ட ஓப்பந்தத்தின் படி கடந்த ஓரு வருடமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சர்வேதச தரத்தில் கல்வி மற்றும் செயல் திட்ட முறைகளை பயிற்றுவித்து சிறந்த பள்ளிக்கான விருதை கவுன்சிலிடம் இருந்து பெற்றுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் உடனான உடன்படிக்கையின் படி 2016&2017 மாணவர்களுக்கு சர்வேதச அளவிலான செயல் திட்ட முறைகளை பயிற்றுவித்து ஓரு வருடத்திற்குள் தன்னுடைய அயராத பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது.இந்த சீரீய பணியின் சிறப்பை பாராட்டி சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பாளர் சியோரான் தெவன் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேர்லேண்ட் பள்ளியின் நிர்வாக குழுத் தவைரும் பள்ளி தாளாளருமான ஆர், தீபாலட்சுமி,மற்றும் பள்ளியின் நிர்வாக குழு துணைத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி அவர்களுக்கு 2017&&2020 வருடத்திற்கு  இங்கிலாந்து நாட்டின் மணி மகுட விருதான பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இண்டர் நேஷனல் ஸ்கூல் சிறந்த பள்ளிக்கான விருதை பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமை பொறுப்பாளர் சியோரன் தெவன் பள்ளி தாளாளர் ஆர்.தீபாலட்சுமி, பள்ளியின் நிர்வாக குழு துணைத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தியிடம் வழங்கினார். இந்த விருதை பெற்றதற்காக தாளாளர் தீபாலட்சுமிக்கு பள்ளி ஆசிரியைகள் சார்பில் பாராட்டு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது, பள்ளி தாளாளர் ஆர்.தீபாலட்சுமி விழாவில் பேசும் போது ரோபோடிக்,லேப்,கம்ப்யூட்டர் லேப் ,உள் விளையாட்டு அரங்கம் என பல் வேறு வசதிகள் நம் பள்ளியில் உள்ளது.நீட் மற்றும் ஜ.ஜ.டி.பவுண்டேசன் கோச்சிங் நடத்தப்படுகிறது.சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து வந்த வித்யா சாகர் என்ற பொறியியல் வல்லுநர்,மெட்டீரியல் இன்ஜினியரிங் என்ற தலைப்பில் பேசினார்.அமெரிக்காவில் இருந்து வந்த சுரேந்திரன்,நந்தகுமார் ஜ.ஆர்.எஸ்.போன்ற பல்துறை வல்லுனர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.விளையாட்டிலும் மாநில மாவட்ட அளவிலும் பல்வேறு பரிசுகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.பிரிட்டிஷ் கவுன்சிலின் விதிகளின் படி சர்வ தேச தரத்தில் பாடங்களை நடத்தி சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளோம்.   இந்த  வெற்றிக்கு அடித்தளமாக இருந்து பணியாற்றி வரும் பள்ளி நிர்வாக குழு மட்டுமில்லமால் பள்ளி இருபால் ஆசிரிய ஆசிரியைகளையும் மாணவ மாணவிகளையும்  பேர்லேண்ட் ஸ்கூல் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும் ஓத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்   தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் மேலும் இது போல் பல் வேறு விருதுகளை நமது பள்ளி பெற அயராது பாடு பட வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக குழு துணைத் தலைவர் விநாயக மூர்த்தி,கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன்.இணைச் செயலாளர் வசந்தன் உள்பட பெற்றோர்கள்,மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து