கடுகூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் : கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் பார்வையிட்டார்

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      அரியலூர்
Ariyalur 2017 12 20

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கடுகூர் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பரிசோதனை முகாமினை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பரிசோதனை முகாம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களான கடுகூர், குமிழியம், திருமானூர், தா.பழூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம், ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அனைத்து விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், 300 கர்ப்பிணித்தாய்மார்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக 132 கர்ப்;பிணிப்பெண்களுக்கு, மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. சிக்கலான பிரசவம் இம்முகாம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :-அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய், சேய் நலன் காக்கும் விதமாக கர்ப்பிணித்தாய்மார்களுக்கு முன் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமின் முக்கிய நோக்கம் மகப்பேறு காலங்களில் ஏற்படும் சிக்கலான பிரசவங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்குண்டான மருத்தவ ஆலோசனை மற்றும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வசதியாக இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில், கர்ப்பிணித்தாய்மார்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இம்முகாம் வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது. எனவே, கர்ப்பிணித்தாய்மார்கள் இம்முகாம்களை பயன்படுத்தி ஆரோக்கியமான குழந்தைப்பேறு பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தெரிவித்தார்கள். இம்முகாமில், மேம்படுத்தப்பட்ட கடுகூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.உமாமகேஸ்வரி மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து