ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மேலஉளுர் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை பங்கேற்பு

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      தஞ்சாவூர்
Thanjai 2017 12 20

 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மேலஉளுர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (20.12.2017) பார்வையாளராக கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,இன்றைய தினம் கிராமங்களில் தூய்மை நாள் கொண்டாடப்படுகிறது. தூய்மை விழிப்புணர்வு தொடர்பாக நமது மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராமங்களில் தூய்மை நாள் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு கூட்டத்தில் முக்கிய நோக்கம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராமங்களில் பாதுகாப்பான கழிப்பறை பயன்படுத்துவது குறித்தும், வீட்டை சுற்றி குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிப்பது குறித்தும், வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பாதுகாப்பது குறித்தும், பொது இடங்களில் குப்பைகள் கொட்டாமல் தூய்மையாக பராமரித்தல் குறித்தும் போன்றவைகளை பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தனி நபர் இல்ல கழிப்பறை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மை குறித்தும் இந்த கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 3,78,995 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே கிராமப்புறங்களில் 2,30,300 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டி மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், தற்பொழுது 1,48,700 தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் வருகிற 31.12.2017க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. கழிப்பறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.12,000 மானியமாக வழங்கி வருகிறது. கழிப்பறை பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமாக வாழ்வதற்கும் வழிவகுக்கும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் வருகின்ற ஜனவரி 02.01.2018 முதல் முழு சுகாதாரம் கடைப்பிடிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், விஜய், உதவி செயற்பொறியாளர் இளஞ்சேரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(சிறு சேமிப்பு) ஜெ.ரோஸ்லீன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து