விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு சார்பாக, பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      விழுப்புரம்
viluppuram collector

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு சார்பாக, பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,   வழங்கினார்

எய்ட்ஸ் தின நிகழ்ச்சி

திட்ட இயக்குநர் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், சென்னை அவர்களின் உத்தரவின் பேரில் உலக எய்ட்ஸ் தினம் - 2017 நிகழ்ச்சிகள் டிசம்பர்-1 2017 அன்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மூலமாக நடத்தப்பட்டது.  மேலும், டிசம்பர் 2017 மாதம் முழுவதும் விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.இதன் தொடர்பாக இன்றைய தினம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இதில் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி பயிலும் 2 குழந்தைகளுக்கு ரூ.1000- ஊக்கத்தொகையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை 3 நபர்களுக்கும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆணை 20 நபர்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை 46 நபர்களுக்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.பியர்லின் மேபல் ரூப்பமதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், டாக்டர்.ஜெமினி, துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) டாக்டர்.சுதாகரன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) டாக்டர்.சுகந்தி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட அலுவலர் டாக்டர்.சுகந்தன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து