அண்ணாமலை பல்கலைகழகத்தில் ரத்ததான முகாம்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      கடலூர்
blood camp

அண்ணாமலைப் பல்கலைகழக வேளாண்புல மாணவ மாணவிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில்  நடைபெற்றது.

ரத்ததான முகாம்

இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்டு தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் ரத்தம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வேளாண்புல முதல்வர் முனைவர்  ரவிச்சந்திரன், லெப்டினன்ட் கர்னல் சிவதாஸ், டாக்டர். மீனா, டாக்டர். விஸ்வநாதன், சுவேதார் மேஜர் சந்திரமாப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை கேப்டன்.  கனகராஜன், தேசிய மாணவர்படை அலுவலர்  ஏற்பாடு செய்தார். மாணவர்களின் சேவையை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பாராட்டினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து