அதியமான் கோட்டையில் மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கும் விழா: கலெக்டர் கே.விவேகானந்தன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      தர்மபுரி
4

தருமபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளியின் பசுமைமன்றம் இணைந்து நடத்தும் மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.

மரக்கன்றுகள்

தருமபுரி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் செந்தில் பப்ளிக் பள்ளியின் பசுமைமன்றம் இணைந்து நடத்தும் மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செந்தில் குழுமத்தின் தலைவர் செந்தில் சி கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, தாளாளர் தீப்தி தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் 3587 மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கு மல்பெரி மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.

பின்னர் இவ்விழாவில் கலெக்டர் கே.விவேகானந்தன், பேசியதாவது:தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கைகளால் பள்ளிகளில் மாணவர்கள் மரம் நடும் விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல பகுதிகளில் தொடர்ந்து பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப் பரப்பளவு 33 சதவீதமாக உள்ளது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டு 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சதவீதத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விதைப்பந்து வனப்பகுதிகளில் எறியும்போது அதில் உள்ள விதைகள் செடிகளாக மாறி, மரங்களாக வளரும்போது மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். நாம் அதிகமாக பெட்ரோல், டீசல் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு இணையாக பசுமை பரப்பளவை நாம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் அதிக அளவு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இந்த மரகன்றுகள் வளர்க்கும் திட்டத்தில் வேர் வலுவாக்கும் (சுழழவ ணுழநெ Pடயவெயவழைn) என்ற புதுமையான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மல்பெரி செடிகள் பட்டுவளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை மூலம் நடப்பட்டு வருகிறது. சாதாரணமாக நடப்படும் செடிகளை விட இந்த புதுமையான முறை மூலம் நடப்படும் செடிகள் மூன்று மடங்கு நல்ல விளைச்சல் கொடுக்கிறது.

பட்டுப்புழு வளர்ப்பு

 

மல்பெரி சாகுபடி மேற்கொள்ள ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்து புழு வளர்ப்பு மேற்கொள்ள ரூ.40 ஆயிரம் போதுமானதாகும். மல்பெரி தோட்டங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானிய வசதியுடன் 5 ஏக்கர் வரை சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை 1500 சதுர அடிக்கு கூடுதலாக கட்டும் விவசாயிகளுக்கு ரூ.82 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படுகிறது. பொதுமக்களின் குறைகள் மற்றும் தகவல்கள் அறியும் வகையில் அரசு சேவை என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கே.விவேகானந்தன், பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் காளிதாசன், நிர்வாக அலுவலர் ஜெ.கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சி.ஸ்ரீனிவாசன், முதல்வர்கள் பி.செந்தில் முருகன், எம்.செல்வம், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து