தளி ஒன்றியத்திற்குட்டப்பட்ட கொரனூர்,பெரியகொடப்பள்ளி, உப்பனூர்,கக்கதாசம் ஆகிய கிராமங்களில் கலெக்டர் சி.கதிரவன் நேரடி ஆய்வு

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      கிருஷ்ணகிரி
3

தளி ஒன்றியம், கொரனூர் ஊராட்சி, கெம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக விவசாயி முனியப்பா சாமந்தி சாகுபடி செய்து வருகிறார்.இவற்றிற்கு தோட்டக்கலைத்தறை சார்பாக மழைநீர் சேகரிப்பு தொட்டி ரூ.1.5 லட்சம் மதிப்பிலும், ரூ.4 லட்சம் மதிப்பில் பாலிஹவுஸ் குடிலும் அமைத்துள்ளார். இதற்கு அரசின் உடைய மாணியம் 75 சதவிகிதம் மானியம் பெற்றுள்ளதையும்,பெரியகொடப்பள்ளி கிராமத்தில் சென்னீரப்பா என்பவர் தன்னுடைய 2.25 ஏக்கர் நிலத்தில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் சொட்டுநீர் பாசனம் அமைத்து மேரிகோல்டு, குடமிளகாய் சாகுபடி செய்துள்ளார். இவற்றிற்கு தோட்டக்கலைத்துறை இயக்கம் சார்பில் 100 மூ மாணியம் பெற்றுள்ளதையும், மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார். அதே விவசாயிகள் தன்னுடைய நிலத்தில் 32 லட்சம் மதிப்பில் நிலர்போர்வை அமைத்து ரூ.16 ஆயிரம் மாணியம் பெற்றுள்ளதையும், அந்த நிலப்போர்வையில் ரோஜா மலர் சாகுபடி செய்து செடியின் விரிவாக்கத்திற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், அதற்கு அரசு மாணியம் ரூ.10 ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளார்.

துவரை சாகுபடி

மேலும் பெரிய கொடப்பள்ளி ஊராட்சியில் ராமசந்திரா ரெட்டி என்பவர் கார்னேசன் மலர் சாகுபடி செய்துள்ளார்.இவர் இதற்காக 30 அடி ஆழத்தில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு அமைத்துள்ளதையும், வேளாண்மைத்துறை சார்பாக தேவகான பள்ளி ஊராட்சியில் விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் ராமசாமி ரெட்டி என்பவர் தன்னுடைய 7 - ஏக்கர் நிலத்தில் துவரை சாகுபடி செய்துள்ளதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டனர்.

மேலும் உப்பனூர் பகுதியில் கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தி குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கும் பொழுது உழவர் உற்பத்தி குழுவில் உள்ள விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயித்திற்கு மாறவேண்டும், மண்புழு உரம் தயாரித்தல், கால்நடைகளுக்கு அசோலா தீவனம் தயாரிப்பதோடு அவற்றை பயனபடுத்தவும் வேண்டும். இதனால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, அதிக லாபம் கிடைக்கும் என மாவட்ட கலெக்டர் விவசாயிகளிடம் தெரிவித்தார். பின்பு இக்கூட்டத்தில் சுழல் கலப்பை 1 - விவசாயிக்கும், விதை விநியோகம் 1 - விவசாயிக்கும், நீர்கடத்தும் குழாய் 1 - விவசாயிற்கு என 3 - விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

மேலும் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் , தாங்களே குழுவை அமைத்து உருவாக்கி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய வேண்டும் என விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து