முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் பட்டமளிப்பு விழா

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு தொழிற் பயிற்சி (மகளிர்) நிலையத்தில், கல்வியாண்டில் படித்து பயிற்சி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்  .ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், ஆண்டிபட்டி அரசு தொழிற் பயிற்சி (மகளிர்) நிலையத்தில் பயிற்சி பெற்ற 106 மாணவியர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான பட்டங்களை (சான்றிதழ்கள்) மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழக அரசு மாணவ, மாணவியர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மேலும், ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை போன்று தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் படித்து பட்டம் பெற்று வருகின்றனர். அரசு வேலைக்கு செல்ல அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற பல்வேறு தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
  தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், நிலையான வருவாயினை ஏற்படுத்திடவும் இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்கிட எண்ணற்ற கடனுதவிகளை வழங்கி அவர்களை புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கி வருகிறது. இளைஞர்கள் தொழிலினை நன்கு அறிந்து, அதனை முறையாக செய்வதன் மூலம் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகிட முடியும். மாணவ, மாணவியர்கள் கற்ற கல்வியினை வைத்து வாழ்க்கையினை சிறப்பாக அமைந்துக்கொள்ள வேண்டும். பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்கள் இப்பயிற்சி நிலையத்தில் பெற்ற பயிற்சியினை கொண்டு தங்களுக்கும், தங்களது குடும்பத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தெரிவித்தார்.
 இவ்விழாவில், ஆண்டிபட்டி அரசு தொழிற் பயிற்சி (மகளிர்) நிலைய பயிற்சி அலுவலர் சற்குணம்  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்  விஷன் 2020 தலைவர் ்செந்தூரான்  குழுதுணைத்தலைவர் வஜ்ரவேல்  குழு உறுப்பினர்கள் சீனிவாசன்  பாண்டியன்  பாசில் கல்வி நிறுவன இயக்குநர் தி.மைக்கேளினீ  அரசு தொழிற் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து