முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூரில் தொழில் முனைவு மற்றும் சந்தைதப்படுத்துதல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலகத்தில் சுற்றுலாத் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா தலங்களில் பெண்களுக்கான கிராமிய சுற்றுலா தொழில் முனைவு மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய 5 நாள் பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, வழங்கினார்.

சான்றிதழ்கள்

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மற்றும் அருகில் உள்ள இடங்களில் தொழில் புரியும் பெண்களுக்கு ஈடுபடும் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு பயிற்சிகள் வழங்கும் விதமாக 22 நபர்கள் தேர்வு செய்து பல்வேறு தலைப்புகளில் தொழில் நுட்பங்கள் பிற துறை வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், வங்கி இணைப்புகள், தொழில் சார்ந்த கடன்கள், மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரித்தல், தொழில் மானியங்கள் மற்றும் பெண்களுக்கான சமூக பொறுப்புகள், சமூக பாதுகாப்புகள், பெண்களுக்கான உரிமைகள், சட்டங்கள் அணுகுமுறைகள், பாலின பாகுபாடுகள் போன்றவைகள்; அந்த துறை சிறப்பு வல்லுநர்களை கொண்டு பயிற்சி மற்றும் குழு விவாதங்களுடன் நடத்தப்பட்டன.

மேலும் இயற்கை உணவு வகைகள் சிறு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், மற்றும் பல வகையான உணவு வகைகள் பற்றியும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் பேச்சு பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 22 பெண்களுக்கு மாவட்ட கலெக்டர் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது, சிறு தொழில் முனைவோர் வணிக ரீதியாக தன்னம்பிக்கையுடன் தொழில் செய்வது பற்றி இப்பயிற்சி வகுப்பு பயனுள்ளதாக அமைகின்றது. பொதுவாக கிராமப்புற பெண்களிடம் வரவு செலவு செய்வது குறித்த அனுபவ அறிவு உண்டு, அதே போல் பெண்கள் தொழில் ரீதியாக அதை பயன்படுத்தும் போது வரவு செலவுகளை மேற்கொள்வது குறித்தும், வங்கிகளை அணுகி கடன் பெறுவது குறித்தும், அதை முறையாக திருப்பி செலுத்துவது குறித்தும் இப்பயிற்சி முலம் தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு தொழிலையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் சிறப்பாக செய்யலாம். வாடிக்கையாளர்கள் நம்மை நாடி வர வேண்டும். தொடர்ச்சியாக நம்மிடம் பொருட்களை பெறுவது மட்டுமல்லாமல் குடும்பம் சார்ந்த நபர்களிடமும் நம்மை பற்றி கூறி பொருட்கள் வாங்க வரும் வகையில் நமது அணுகு முறை இருக்குமேயானால் தொழில் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும் என்றார். இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜசேகரன், மாநில பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெக்ஸ் வாஸ், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து