எஸ்பிளனேடு பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் நான்கு பேருக்கு 7 வருடம் சிறைத்தண்டணை நீதிமன்றம் தீர்ப்பு

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      சென்னை

சென்னை, வில்லிவாக்கம், தாளாங்கிணறு தெரு, எண்.22 என்ற முகவரியில் குமார், /43, /பெ.ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒலிம்பிக் கார்ட்ஸ் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 13.04.13 அன்று மாலை 6.30 மணியளவில் தனது நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஆண்டர்சன் தெரு, அண்ணாபிள்ளை தெரு சந்திப்பில் சென்றுக்கொண்டிருந்த போது அங்கு நின்றுகொண்டிருந்த 4 நபர்கள் மேற்படி குமாரை வழிமறித்து அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

குற்றப்பத்திரிகை

இது தொடர்பாக குமார் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய சாந்தகுமார், ஹேம்நாத், விஜி () விஜயராஜ், திருநீர் () திருநாவுக்கரசு ஆகிய நான்கு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக 18வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காவல் ஆய்வாளர் மூலம் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் வந்தது.

இவ்வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது குற்றவாளிகளான 1.சாந்தகுமார், 2.ஹேம்நாத், 3.விஜி () விஜயராஜ், 4.திருநீர் () திருநாவுக்கரசு, ஆகிய நான்கு நபர்களுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, விரைவாக சாட்சிகளை ஆஜர் செய்தும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகரக் காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து