நடிகை பாவனாவுக்கு ஜன. 22ல் திருச்சூரில் திருமணம்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      சினிமா
bhavana

திருவனந்தபுரம், நடிகை பாவனாவுக்கு திருச்சூரில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல இடங்களில் நடித்தவர் பாவனா. கேரளாவை சேர்ந்த இவர், மலையாளம் மற்றும் பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் கேரளாவை சேர்ந்த நவீன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகை பாவனா, நவீன் திருமணம் விரைவில் நடப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு திருமணம் தள்ளிப் போனது. இப்போது வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் திருமணம் நடைபெறுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து