நான் நடித்த எந்த படத்தையும் பிரியதர்ஷன் பார்த்ததில்லையாம்: உதயநிதி ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      சினிமா
Udhayanidhi

Source: provided

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நிமிர்’ படத்தை இயக்கிய பிரியதர்‌ஷன், உதயிநிதியின் எந்த படத்தையும் பார்த்ததே இல்லை என்று அவரே கூறியிருக்கிறார்.

மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நிமிர்’.

மகேஷிண்ட பிரதிகாரம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.


அதில் இயக்குநர் பிரியதர்ஷன், உதயநிதி, பார்வதி நாயர் மற்றும் தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா கலந்து கொண்டனர். படம் குறித்து உதயநிதி பேசும் போது,படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தணிக்கைக்கு அனுப்பியுள்ளோம். தணிக்கை கிடைத்த பிறகு ஜனவரி 14 அல்லது 26-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும் படமாக நிமிர் இருக்கும். பிரியதர்ஷனின் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பின் போது மகேந்திரன் சாருடன் நடித்ததில் மகிழ்ச்சி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். பிரியதர்ஷன் சார், நான் நடித்த எந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. பார்க்காததால் தான் என்னை வைத்து படம் இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். படம் முழுக்க இயக்குநரையே பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

படம் பார்த்த எனது மனைவி மனிதன் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு படம் இருக்கிறது என்று கூறியதாக தெரிவித்தார். இந்த படத்திற்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து