முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதுமைக்கான வரி உயருகிறது

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

கோதுமைக்கான இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த வரி உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது. கடந்த மாதம் 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வரி விகிதத்தில் இருந்தும் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016-17-ம் ஆண்டு கோதுமை உற்பத்தி 9.83 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 10 சதவீத வரியில் 10 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து