திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைகோவிலுக்கு 40 லட்சம் செலவில் 2 புதிய பேருந்து போக்குவரத்து அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      நாமக்கல்
nkl

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் மலைகோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும் சிவன் தன் உடலில் தனக்கு பாதியும் சக்திக்கு பாதியும் சரிசமமாக கொடுத்ததால் அம்மையப்பன் மலை என்றும் பெயர் பெற்றது ஆகும் மேலும் மலைகோவிலில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும் அம்மாவாசை, பவுர்ணமி, மார்கழி மாதம், வைகாசி மாதம் ஆகிய நாட்களில் இரு சக்கரவாகனம்,நான்கு சக்கர வாகனம்,மலை பேருந்து ஆகிய வழியாக மலைக்கு மக்கள் வருவது வழக்கம் மலைப்பாதை சுமார் 6 கிலோ மீட்டருக்கு போடப்பட்டு உள்ளது.

புதிய பேருந்துகள்

மேலும் திருமண நாடுகளில் மலை பேருந்து மேலே சென்று வர மிகவும் குறுகலான சாலை என்பதால் சிரமமாக இருந்தது இதனை கருத்தில் கொண்டு திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி திருச்செங்கோடு தனியார் நிறுவனங்களிடம் மினி பேருந்துகள் தேவை என வைத்தார் இதனால் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மினி பேருந்தும் கிறிஸ்டி தொழில் நிருவனங்கள் சார்பில் ஒரு மினி பேருந்து தல 20 லட்சம் செலவில் தருவதாக உறுதியளித்தார்கள் பின்னர் இரண்டு நிறுவனங்களின் சார்பில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வை அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி முன்னிலையிலும் இரண்டு மினி பேருந்துகளும் இயக்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், முன்னாள் கவுன்சிலர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து