முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி-சிலமலை காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      தேனி
Image Unavailable

போடி, -தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போடி-சிலமலை ஊராட்சிக்குட்பட்ட டி.எஸ்.பி. காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்காலனி அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் அங்கு சாக்கடை வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் இல்லை. அதேபோல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார வளாக கழிப்பிட வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சிலமலை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், சிலமலை டி.எஸ்.பி. காலனியில் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிலமலை கிளை மற்றும் சிலமலை காலனி குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
சிலமலை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சிலமலை காலனி குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகி சின்னச்சாமி தலைமை வகித்தார். முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜப்பன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், தாலுகா செயலாளர் செல்வம், தங்கபாண்டி, செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து