திப்பணாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Dengu awarness nellai collector

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணாம்பட்டி ஊராட்சி, வினைதீர்த்தநாடார்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி   நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தூய்மை பணி

அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர்  நேரில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைக்கவும், பள்ளி வளாகத்தில் பயன்படுத்தாத பழைய கட்டடங்களை உடனடியாக இடிக்கவும் உத்தரவிட்டார். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும், பள்ளி வளாகத்தினை தூய்மைமாக பராமரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள அரிசி ஆலை, கோயில் வளாகம் ஆகிய பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார பணியாளர்களிடம் கொசு ஒழிப்பு பணிகளை மிக தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பள்ளி மற்றும் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது, சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.சோமசுந்தரம், ஆலங்குளம் வட்டாட்சியர்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனம், ராதா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் உள்பட சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து