குமரி மாவட்டம் தோட்டமலை, மாராமலை பகுதிக்கு ரூ. 4.04 லட்சத்தில் அணுகுசாலைஅமைக்கும் பணி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      கன்னியாகுமரி
kumari collector

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் அனைத்து பகுதிகளும் குறிப்பாக, மலைவாழ் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக சேதமடைந்துள்ளது. 

பொதுமக்கள் கோரிக்கை

தோட்டமலை, மாராமலை மற்றும் தச்சன்மலை பகுதிகளில் உள்ள  65 மின்மாற்றிகள் உட்பட மின்பாதை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்பாதை சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் எடுத்து செல்லவேண்டும். அதனால் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளுவதற்காக தரைவழியாக மின் உபகரணங்களை எடுத்து செல்ல ஏதுவாக  எட்டாங்குன்று  முதல் தோட்டமலைக்கு  தற்காலிக அணுகுசாலை அமைப்பதற்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர். மலைவாழ் மக்களின்  கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர்  எட்டாங்குன்று முதல் தோட்டமலைக்கு 121 மீ நீளத்தில்  தற்காலிக அணுகுசாலை அமைப்பதற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (ளுனுசுகு) ரூ.4.04 இலட்சத்தை ஒதுக்கீடு செய்து, பணியினை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார்கள். நடைபெற்று வரும் அணுகு சாலை அமைக்கும் பணியினை  கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்    அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.  மேலும், பேச்சிப்பாறை காமராஜர் நகர், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட களியல், தெங்கம்புத்தூர், திக்குறிச்சி, பாறைக்குளம்ஏலா ஆகிய மலையோர பகுதிகளில் ஓகி புயலினால்  பாதிக்கப்பட்ட இரப்பர்மரம், வாழைமரம் உட்பட தோட்டக்கலை பயிர்கள் மற்றும் நெற்பயிர்களை கலெக்டர்  பார்வையிட்டார்.  மலையோர விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தபின்னர், கலெக்டர்  தெரிவித்ததாவது:-கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகள் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஓகி புயலினால் சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக விரைந்து மேற்கொள்ளப்பட்டு, உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.  பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் மின்விநியோகம் முழுமையாக சீரமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என தெரிவித்தார்.ஆய்வின்போது பத்மநாபபுரம் சார் ஆட்சியர்  இராஜகோபால் சுன்கரா  தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  அசோக் மேக்ரின், விளவங்கோடு வட்டாட்சியர்                  கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்  மீனா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து