காவேரிபுரம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறை விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பங்கேற்பு

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      சேலம்
4

 

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறை விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது.

விழிப்புணர்வு

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. அதே போன்று சுகதாரமான சேலத்தை உருவாக்கும் வகையில் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக சேலம் மாவட்டத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்திடவும் தனிநபர் இல்ல கழிப்பறை அவசியத்தை அனைவரும் உணரும் வகையில் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தூய்மையான, சுகாதாரமான சேலம் மாவட்டத்தை உருவாக்குவது நமது ஒவ்வொருவருடையவரின் கடமை என்பதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசினார்.

ஆய்வு

இதனைத் தொடர்ந்து கலெக்டர் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்தார். தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் செயல்விளக்கத்தினை பார்வையிட்டும், 100 நாள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முகாம் குறித்து ஆய்வும், மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையினையும் மேற்கொண்டார்கள். மேலும், சித்திரப்பட்டி புதூர், ஆலமரத்துப்பட்டி, மூலக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது மேட்டூர் சார் கலெக்டர் மேகநாத ரெட்டி, , ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து