பெண் குழந்தைகளுக்கு நடக்கும் சிறுவயது திருமணத்தை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஆணையத்தின் தலைவர் நிர்மலா பேச்சு

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் சிறுவயது திருமணத்தை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி. நிர்மலா கூறினார். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஒருங்கிணைந்த குழு கூட்டம் தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அ.கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழிப்புணர்வு

இதில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா கலந்து கொண்டு பேசுகையில் ஜவ்வாதுமலை மக்களின் குழந்தைகள் வாழ்க்கையில் வளர்ச்சி பெற வேண்டும் அதற்கு தேவையானது என்ன என்பதை அரசு அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் அதற்கான ஒத்துழைப்பு தர வேண்டும் மலைவாழ் குழந்தைகள் படிக்க எத்தனை பள்ளிகள் உள்ளது. ஆசிரியர்கள் உள்ளார்களா? பற்றாக்குறை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள் எத்தனைஉள்ளது? எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் பள்ளியிலிருந்து பாதியில் நின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கவேண்டும், செம்மரக்கட்டைகள் வெட்ட மாணவர்கள் சென்றுள்ளார்களா? என்பதை பார்த்து தடுக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலே திருமணம் நடப்பதை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குழந்தை தொழிலாளர்களை கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்க வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பள்ளிகளில் ஆசிரியர் நியமித்து நடக்கும் பள்ளிகளில் பணிநிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் மலைவாழ் மக்கள் குழந்தைகள் வளர்ச்சியடை குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் போளூர் தாசில்தார் அ.பாலாஜி, எஸ்எஸ்ஏ இயக்க மேற்பார்வையாளர் என்.மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து