குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Courtallam  falls

குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பயணிகள் கூட்டம்

 குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் நிலவி வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருக்கிறது. மெயின் அருவியில் காலை, மாலை நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகளவிலும் மற்ற நேரங்களில் பரவலாகவும் இருக்கிறது. நேற்று விடுமுறை என்பதால் ஐயப்ப பக்தர்களுடன் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் குற்றாலத்தில் அதிகரித்துள்ளது. இவர்கள் அருவிகளில் குளித்து மகிழும் நிலை ஏற்பட்டது. ஐந்தருவியில் 3 கிளைகளில் தண்ணீர் விழுகிறது. இங்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பரவலாக காணப்பட்டது. குற்றாலம் வரும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் புனித நீராடி குற்றாலநாதரை வழிபட்டு வருகின்றனர். குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துங்கியதால் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.கோவிலைச் சுற்றிஅமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத்தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடை வீதிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து